மதுரை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சோதனை செய்த போலீசார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யணன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. கார்த்திக்கை கைது செய்த பெருங்குடி போலீசார் சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.