சேரன்மகாதேவியில் ஆவி செறிவூட்டும் இயந்திரங்களை அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஆவி செறிவூட்டும் 100 இயந்திரத்தை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா வழங்கினார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது சொந்த செலவில் கொரோனா நோயாளிகளுக்கு 100 ஆவி செறிவூட்டும் இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்தார். சட்டமன்ற உறுப்பினர் சார்பில் அதிமுக நிர்வாகிகள் சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சப்- கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது புகாரி மற்றும் தாசில்தார் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.