திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழவதும் வெகு சிறப்பாக திமுக தொண்டர்கள் மற்றும் பொருப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.முதலமைச்சரும் கருணாநிதியின் மகனுமான முக ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் மகனும் மத்திய முன்னாள் அமைச்சருமான மு.க. அழகிரி அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.