முதலமைச்சரிடம் கல்வித்தந்தை நேற்று கொடுத்த நிதி- படம் ஒன்று செய்தி இரண்டு.

Update: 2021-06-02 15:20 GMT

கல்வித்தந்தை நிதியளித்தபோது.



ஒரு புகைப்படம் - இரண்டு செய்தி

(இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்)

செய்தி 1

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களை  தலைமைச் செயலகத்தில், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தனது மனைவி. ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோர் உடன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


செய்தி 2

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாராகியிருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, திரைத்துறைக்கு நெருக்கமான சென்னையைச் சேர்ந்த ஒரு 'கல்வித் தந்தை' நடத்தும் கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளாகப் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. கல்வித் தந்தையின் அந்தப்புரத்துக்கு காவல்துறை அதிகாரிகள் சிலரும் வந்து செல்வதால், தன்மீது எந்த புகாரும் கிளம்பாது என்று தைரியமாக இருக்கிறாராம் அவர். காவல்துறை முறையாக விசாரணையை நடத்தினால், பல பூதங்கள் கிளம்பலாம்.



 


 

Similar News