திருநெல்வேலி - தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Update: 2021-06-02 14:20 GMT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில்,தென்மேற்கு பருவமழை இம்மாதம் தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துதுறை அலுவலர்களுடனான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது..

மழை மற்றும் இயற்கை இன்னல்கள் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

வட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்திட வட்டாச்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சார் ஆட்சியர்கள் தலைமையில் மண்டல குழுக்கள், முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் சமயங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முழுவதுமாக பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மழை நீர் வழி தடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தங்கு தடையின்றி செல்லுவதற்கான வழி வகை செய்ய வேண்டும் மழை நீரினை முடிந்த அளவு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சேமிப்பதற்கு தன்னார்வலர்களுடன் அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கனரக இயந்திரங்கள், கிரேன், மரம் வெட்டும் கருவிகள்,நீர் வெளியேற்றும் மோட்டார் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரம், மருந்து போன்றவற்றை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் .

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து குடிமராமத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் நிலவேம்பு,கபசூரன குடிநீர் போன்றவற்றை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், திரு பிரத்தீக் தயாள் , மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மந்திராச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு எம்.கணேஷ்குமார், உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Similar News