இயற்கை உரத்தில் விளையும் காய்கறிகளை ஆதரவற்றோர் இல்லத்துக்கு இலவசமாக வழங்கும் திருநெல்வேலி மாநகராட்சி.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி பாளையங்கோட்டை மண்டலம் 18-வது வார்டு வேலவர் காலனியில் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரத்தின் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று வழங்கும் வகையில் அறக்கட்டளையின் நிர்வாகி சரவணனிடம் மாநகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாறை மண்டல உதவி ஆணையாளர் பிரேமானந்த் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.