வாசுதேவநல்லூர்- நடமாடும் காய்கறி அங்காடிகளின் விற்பனை,விலைப்பட்டியலை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-02 13:35 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக 2018 19 ஆம் ஆண்டு நிதியாண்டில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நமக்கு நாம் கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் மூன்று நடமாடும் விற்பனை அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குனர் க. கிருஷ்ணகுமார் அவர்கள் நடமாடும் காய்கறி அங்காடிகளின் விற்பனை, விலைப்பட்டியல் ஆகியவற்றை வாசுதேவநல்லூர் வட்டாரம் துரை சாமியாபுரம் கிராமத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சங்கரன்கோயில் கோட்ட வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், சங்கரன்கோயில் உதவி வேளாண்மை அலுவலர் மரகதவள்ளி, மேலநீலிதநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர், தங்க விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News