தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரனோ நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கான உதவி மையம்

Update: 2021-06-02 09:56 GMT

 நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் 

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரனோ நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கான உதவி மையத்தினை இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில் குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கான உதவி மற்றும் ஆலோசனை மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நோய் தொற்றில் இருந்து குணமான பின் ஏற்படும் மன அழுத்தம், அதனைத் தொடர்ந்து உடலில் ஏற்படும் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், போன்ற நோய் தொடர்பான ஆலோசனை, உதவியை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News