நெல்லை- ஆதரவற்ற பழங்குடியின மக்களுக்கு உணவளித்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்

Update: 2021-06-02 09:42 GMT

ஆதரவற்ற பழங்குடியின மக்கள் உணவளித்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

நெல்லை கொரோனா ஊரடங்கில் ஆதரவற்ற பழங்குடியின மக்கள் நூறு நபர்களுக்கு எஸ்டிபிஐ தன்னார்வலர்கள் உணவளித்தனர் எஸ்டிபிஐ கட்சி மற்றும் தன்னார்வ குழு சார்பாக கொரானா முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கும் தொடர்ந்து பத்தாம் நாளான இன்று நூறு நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தருவை அருகே உள்ள காட்டு நாயக்கன் ஊரில் ஊரடங்கில் மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

பாளை தொகுதி செயலாளர் சிந்தா, 29வது வார்டு தலைவர் ஜமால் ,பசுமை மேலப்பாளையம் காசி லெப்பை ஆகியோர் உடன் இருந்தனர்மாவட்ட ஆட்சியர் காட்டு நாயக்கன் ஊரில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அனைத்து குடும்பத்தினருக்கும் ரேசன் அட்டைகள் மற்றும் நிவாரண பொருட்கள் கிடைத்திட விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

சமூக இடைவெளி பேணுவோம்

முககவசம் அணிவோம் ஒன்றினைந்து கொரோனாவை வெல்வோம்

Similar News