ராஜபாளையத்தில் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்

Update: 2021-06-02 08:34 GMT

கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்.


ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக , சேத்தூர், தேவதானம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பல விவசாயிகள் அறுவடை செய்து நெல் களஞ்சியங்களில் வைத்துள்ளனர்.இதைக் கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பேரில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நெல் கொள்முதல் நிலையத்தை கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கட்சியினரை கூட்டமாக கூட்டி , தொடங்கி வைத்தார். அப்போது , திமுக கட்சியியை சேர்ந்த தொண்டர்கள் சமூக இடைவெளி இன்றி நோய் தொற்று பரப்பும் விதமாக கூட்டமாக நின்றனர். தமிழக அரசு அறிவித்த விதிமுறைகள் சாமானிய பொதுமக்களுக்கு தானா? திமுக கட்சியினருக்கு இல்லையா? என்ற அளவிற்கு கூட்டமாக நின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சமூக விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளி என்றி இவ்வாறு இருப்பது நோய் தொற்றை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டுகின்றனர்.

Similar News