சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரம்

Update: 2021-06-01 15:33 GMT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கும் டாக்டர் முருகேசனின் பதவி காலம் வரும் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை நிர்வாகிக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் மையம் இயக்குனர் டாக்டர் சீனிவாசன் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை டாக்டர் பாலாஜி சாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை மேற்கண்ட குழுவினர் பல்கலைகழக நிர்வாகத்தை கவனிப்பார்கள் என கூறப்படுகிறது.

Similar News