மதுரையில் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
பகலில் கடுமையான வெயில் அடித்தது மாலையில் மழை பெய்தது. இருந்தபோதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.மழை பெய்யும்போது, மின்சார தடை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை அண்ணாநகர், மேலமடை வீரவாஞ்சி தெருவில் சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் இருந்த வெப்பமானது, மழையால் குளிர்ச்சியானது.