மக்களை பிளவுப்படுத்தும் சட்டங்களை ஏற்கமாட்டோம் - வீடுகளின் முன்பு கண்டன கோஷங்களிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
மக்களை பிளவுப்படுத்தும் (CAA, NRC, நபர்) சட்டங்களை ஏற்கமாட்டோம் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வீடுகளின் முன்பு கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கரிசல்பட்டியில் சமூக இடைவெளியுடன் தங்கள் வீடுகளின் முன்பு மத்திய பாஜக மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டும் ,வீடுகள் தோறும் சென்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ரஜக், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.