சிவகங்கையில் ஆக்சிஜன் செறிவூட்டிகளும், 5 டன் அரிசியும் அமைச்சரிடம் வழங்கிய தொழிலதிபர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில், தொழிலதிபர் சேது குமணன் 9 இலட்சம் மதிப்பிலான பத்து ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும்,5 டன் அரிசியும் கொரானா நிவாரண பொருள்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் வழங்கினார்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், கோட்டையிலிருந்து உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்கும் முதலமைச்சராக இல்லாமல்,மாவட்டம் தோறும் மருத்துவமனைகளுக்கு சென்று, கொரனோ நோயாளிகளை சந்தித்து குறைகள் கேட்டறிந்துவரும் நிலையில்,களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்யும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மாறியுள்ளார் என்று கூறினார்.
தமிழகத்தில் கிராமம் தோறும்,சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க, பல சீரிய திட்டங்களை முதலமைச்சர் வைத்துள்ளார் என்றும்,கொரானா தொற்றால் அதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,இன்னும் இரண்டு மாதங்களில் நிலைமை சீராகி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பு வகித்த ஊரக உள்ளாட்சி துறையை, என் மேல் நம்பிக்கை வைத்து ஒதுக்கி மு .க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அமைச்சர், தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.