அரசு மருத்துவமனைக்குஆக்சிஜன் செரிவூட்டிகள்வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கொரோனா நோய் தொற்று பாதிக்கபடும் நோயாயாளிகளுக்கு பயன்படும் வகையில் ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கும் விழா சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் கலந்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கினர்.
இந் நிகழ்வின்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் சுகாதார இணை இயக்குனர் நெடுமாறன் முதன்மை மருத்துவர் செந்தில் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்