மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையை செயல்படுத்த இடம் தேர்வு - அமைச்சர் ஆய்வு.

Update: 2021-06-01 09:29 GMT
மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையை செயல்படுத்த இடம் தேர்வு - அமைச்சர் ஆய்வு.

வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

  • whatsapp icon

முழு பொதுமுடக்கம் அமல்பட்டதை தொடர்ந்து மதுரை மாட்டுதாவனி மலர் சந்தை செயல்படாமல் உள்ளது, மல்லிகை உள்ளிட்ட பூ சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து பல்வேறு கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையை செயல்படுத்துவதற்காக இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வனிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிகவரித்துறை அமைச்சர் 

மாட்டுதாவனி மலர் சந்தை ஆம்னி பேருந்து நிலையத்தில் இடம் மாற்றம் செய்து செயல்படுத்தபட உள்ளதாகவும்,கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மலர் சந்தை செயல்படுத்த திட்டமி்டப்பட்டுள்ளது.

குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் புகார் அளிக்கின்றனர்.பாரபட்சம் காட்டுவதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடியாக புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மதுரையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் புகார்கள் உடனடியாக சரி செய்யபட்டு வருகிறது

கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டங்களில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்ட நிலையில் மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பிஉதயகுமார் பங்கேற்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அமைச்சர் கொரோனோ தடுப்பு பணியில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யாமல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்

Tags:    

Similar News