தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் வீடுகளுக்கு சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
நெல்லை மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருத்துவ சேவை அணி வீடுகளுக்கு சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
தமிழகம் முழுவதும் கொரனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக நெல்லை மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருத்துவ சேவை அணி செயலாளர் ஆம்புலன்ஸ் பாதுஷா தலைமையில் மேலப்பாளைம் பகுதியில் ஹாமீம்புரம் 6வது தெரு,11வது தெரு, 12வது தெரு ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதில் இளைஞரணி செயலாளர் சுலைமான், சேக், அப்பாஸ், ஹாஜி, பழனிபாபா பேரவை நிர்வாகிகள் அஜீஸ், ராசித், மாணவரணி ஷாபிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்