காய்கள் வாங்க ஏற்பாடு செய்தது போல, கறிகள்(ஆடு,மாடு) ஏற்பாடு பண்ணுங்க -வன்னி அரசு
தமிழகத்தில் கொரோனா தொங்று பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது,தமிழகத்தில் இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு காலத்தில் நடமாடும் காய்கறி கடைகளுக்கு அனுமதி -செய்தி.
காய்கள் வீடு தேடி வருது, கறி(மட்டன்) இன்னும் வரலையே -வன்னிஅரசு
தமிழகத்தில் கொரோனா தொங்று பரவலைக் கட்யடுப்படுத்த மீண்டும் இன்று முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தள்ளுவண்டி, வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனைக்கு செய்யலாம்.காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கலாம் என உத்தரவு பிறப்பிப்பக்கப்பட்டது.
இதனையடுத்து விடுதலைசிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு தமிழ்நாட்டில் 97சதவீதத்துக்கும் மேலாக அசைவ உணவுகளையே விரும்பி உண்ணுகிறார்கள். அப்படி இருக்கும் போது இறைச்சி,மீன் கடைகள் மட்டும் எதற்காக மூடிக்கிடக்க வேண்டும்? காய்கறிகடைகள் பகுதிவாரியாக அனுமதிக்கப்படுவதைப்போல, இறைச்சி வணிகத்துக்கும் அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.