இராஜபாளையம் கிராமப் பகுதிகளில் தங்கபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
இராஜபாளையம் கிராமப் பகுதிகளுக்கு காய்கறிகள் சரியாக சென்றடைவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தங்கபாண்டியன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு மொத்த வியாபாரிகள் மூலம் மதுரையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு.இராஜபாளையம் கிராம பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. .
கடந்த மூன்று தினங்களாக பொதுமக்களுக்கு சரியாக காய்கறி சென்றடையவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியதையடுத்து தங்கபாண்டியன் எம்எல்ஏ அப்பகுதியில் ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி கிராமப்பகுதிகளில் தனியாக ஒரு இடம் அமைத்து கிராமப் பகுதியில் தனியாக மொத்த வாகனங்களில் காய்கறிகளை கொண்டு சென்று அங்கிருந்து பிரித்து கிராமத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.