உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 5 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை.

Update: 2021-05-29 13:59 GMT

உலமாக்கள் மாதிரி படம்

உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 5 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்,தமிழ்நாடு ஷம்சுல் இக்பால் தாவூதி.மாநில தலைவர் இணைந்து கோரிக்கை வைத்துள்ளனர்

கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான கொரோனா நிவாரண உதவி திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கதிலிருந்து மத வழிபாட்டுத்தலங்கள் மூட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் கடுமையான பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே உலமாக்கள் மற்றும் பள்ளி பணியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 5000 வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கையாகவலியுறுத்தியுள்ளது.

Similar News