மதுரையில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு ராக்கி கட்டி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு.
மதுரையில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு ராக்கி கட்டி தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றி திரிந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், ராக்கி கட்டியும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்..
கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தேவை இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலாம் தன்னார்வ அமைப்பினர் தாம்பூலத்தில் ஆராத்தி எடுத்து மற்றும் அவர்கள் கைகளில் ராக்கி கயிறு கட்டிவிட்டு நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பூமிநாதன் இதில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.