நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் வயல் வேலைக்கு சென்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி மரணம் பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் வயல் வேலைக்கு சென்ற இளம்பெண் மின்சாரம் தாக்கி மரணம் பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி இந்திரா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்திரா தனது குழந்தைகளுடன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது கணவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தோட்டத்திற்கு வயல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தின் உரிமையாளர் கதிரேசன் தனது மோட்டர் அறையை சுத்தம் செய்ய கூறி இந்திராவிடம் கூறி விட்டு சென்றுள்ளார். மோட்டர் அறையை சுத்தம் செய்த போது அருகில் கிடந்த மின் ஒயரில் கைபட்டு மின்சாரம் தாக்கியது. இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே பலியானார்.சத்தம் கேட்டு அருகில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது மின்சாரம் தாக்கி இந்திரா பலியானது தெரிய வந்தது.உடனடியாக பணகுடி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.