சிவகங்கை- ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மானாமதுரை ரயில்வே போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர்.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மானாமதுரை ரயில்வே போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே நிலையத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே போலீசார் நிவாரண பொருட்களை வழங்கினர் , காரைக்குடி வட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை , ராமேஸ்வரம் , காரைக்குடி ஆகிய ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையங்களைப் சேர்ந்த போலீசார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி , பருப்பு , காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர் . மானாமதுரை ஹோலிகிராஸ் முதியோர் இல்லம் , சுந்தர நடப்பு கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லம் ஆகியவற்றிற்கு நிவாரண பொருட்களை வழங்கினர் , விழாவில் ஆய்வாளர் மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்