தூத்துக்குடிமருத்துவமனை- தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை..

தூத்துக்குடியில் அரசுமருத்துவமனை ஊழியர்களுக்கான தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2021-05-28 02:32 GMT

தூத்துக்குயில் தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு துறையும், மருத்துவத் துறையும் இணைந்து ஆபத்துக் காலத்தில் எப்படி தீயை அணைப்பது கையாள்வது எப்படி என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கான தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் தீ தடுப்பு எப்படி மேற்கொள்வது, தீயணைப்பு கருவிகளை எப்படி பராமரிப்பது, முதற்கட்டமாக அவசர காலங்களில் தீத்தடுப்பு பாதுகாப்புக்கு செய்யவேண்டிய பணிகள், தீயணைப்பு கருவிகளை கையாண்டு எப்படி தீயை அணைப்பது என்பது குறித்து பணியாளர்களுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனைகளில் தீ விபத்தினால் நோயாளிகள் உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு துறை இயக்குனர் உத்தரவின் பேரில் கரோனா நோயாளிகள் இருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு கட்டமாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் மூன்றாவது கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதை மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்த கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News