கரூர்-கொரோனா பாதுகாப்பு பணி காவலர்கள் - திருமணநாள்,பிறந்தநாள்-கேக் வெட்டி கொண்டாடிய சக காவலர்கள்

கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள டிராபிக் காவல் அதிகாரி திருமணநாள்,ஆயுதப்படை பெண் காவலர் பிறந்தநாள்-சக காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Update: 2021-05-27 16:48 GMT

கரூரில் இரவு பகல் பாராமல் கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமணநாள் மற்றும் ஆயுதப்படை பெண் காவலரின் பிறந்தநாளை சக காவலர்கள். கேக் வெட்டி கொண்டாடினர். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவித்து அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் இரவு - பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் திருமண நாள் மற்றும் பிறந்த நாளை சக ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் திருமண நாள் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் நித்யாவதி பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக சக காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருவருக்கும் விடுப்பு அளித்து அனுப்பி வைத்தார். வாழ்த்துக்கள் தெரிவித்த சக காவலர்களுக்கு இருவரும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News