விவசாயிகளுக்கு வசதியாக உரக்கடைகள் திறக்க அனுமதி- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் கிடைத்திட வசதியாக உரக் கடைகள் திறக்க அனுமதி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 957 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் கார் பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் பொருள்கள் உரிய நேரத்தில் கிடைத்த வசதியாக கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
தற்பொழுது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. கோடை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் மற்றும் கார் நெல் சாகுபடிக்கு தேவையான அடி உரங்கள் இட வேண்டி இருப்பதால் விவசாயிகளுக்கு தேவையான விதை உரம் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லி மருந்துகள் தங்குதடையின்றி கிடைத்திட வசதியாக அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற 277 தனியார் மற்றும் கூட்டுறவு கடைகள் திறக்கப்பட்டு அரசியல் தடுப்பு நடவடிக்கை முறைகளைப் பின்பற்றி விற்பனை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட விற்பனையாளர்களுக்கு வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளும் குறைவான தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றி வேளாண் இடுபொருட்கள் பெற்று செல்லுமாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.