தேனி எலுமிச்சை விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டத்தில் பரவலாக விவசாயம் செய்யப்பட்டு வரும் எலுமிச்சம்பழத்தின் விலை தற்போது சரிந்து வருவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக விவசாயம் செய்யப்பட்டு வரும் எலுமிச்சம்பழத்தின் விலை தற்போது சரிந்து வருவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வலசை, ஊத்தாம்பாறை, அத்தியூத்து, அருங்குளம் கொட்டகுடி மற்றும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு பகுதி, அகமலை, கன்னக்கரை, ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் எலுமிச்சம்பழம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இந்த மாத துவக்கத்தில் கிலோ ரூ.100 -க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சம்பழம் தற்போது கிலோ ரூ. 50 ரூபாயாக குறைந்துள்ளது.இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.