தேனி மாநகர் முழுவதும் தடுப்புகள் -அடைத்த காவல்துறை-அவதியில் பொதுமக்கள்

தேனி நகர் பகுதியில் உள்ள பாரஸ்ட் ரோடு முழுவதும் காவல்துறை சார்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2021-05-27 06:41 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நடமாட்டத்தையும், வாகன போக்குவரத்தையும், கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் தேனி நகரின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு வெளிகள் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாரஸ்ட் ரோடு திரும்பும் விலக்கு, புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாரஸ்ட் ரோடு வரும் இணைப்புச் சாலைகள் ஆகியவற்றில் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர், குடிதண்ணீர் வாகனம், பால் வாகனம், காய்கறி வாகனம் , அவசர மருத்துவ சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் தடுப்பு வேலிகளை அமைக்கவும், மற்ற பகுதிகளில் உள்ள தடுப்பு வேலிகளை அகற்றவும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News