குமரியில் 120 வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - உடமைகளையும் இழுத்து சென்றது.

Update: 2021-05-26 12:43 GMT

குமரியில் 120 வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - உடமைகளையும் இழுத்து சென்றது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

சுமார் 2000 ஏக்கர் நிலபரப்பிலான விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது.மாவட்டத்தில் குளச்சல், சிங்காரவேலன் காலனி, வாணியக்க்குடி, உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள சுமார் 120 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது.மழைவெள்ளத்தின் வேகம் காரணமாக வீடுகளில் இருந்த உடமைகளை மழை வெள்ளம் இழுத்து சென்றது.


மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததாலும் சூறை காற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது.

Similar News