கனமழையால் விடிய விடிய அவதிப்பட்ட பொதுமக்கள்.

Update: 2021-05-26 12:31 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது, இடை விடாமல் சூறாவளி காற்றுடன் 11 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததால் பாதுகாப்பு கருதி மின்சாரம் முழுமையாக தடை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு கனமழையால் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் விடிய விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர், குளச்சல், மரமடி, குறும்பனை, இரும்பிலி பகுதியில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரை மீனவ கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தால் உணவு பொருட்கள் சேதமடைந்தது.

Similar News