வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மைகளை வைத்து மதுரையில் சிறப்பு வழிபாடு

மதுரையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-05-26 12:11 GMT

மதுரை திரௌபதி அம்மன் கோவில் யாகம்

வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மை குண்டத்தில் போட்டு மதுரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மையை யாக குண்டத்தில் பொசுக்கி மதுரையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.மதுரை மாசி வீதிகளில் ஒன்றான தெற்குமாசி பகுதியில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் கொரானா வைரஸ் அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியாக, நன்மையோடு வாழ வேண்டி கோயில் பூசாரிகள், சிறப்பு யாகம் செய்து வழிபாடு நடத்தினர்.

தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு ஹோம குண்டத்தில் வேத மந்திரங்கள் சொல்லி அக்னி வளர்க்கப்பட்டது. மதுரையில் வளர்க்கப்பட்ட அக்னியில் கொரானா வைரஸ் போன்ற உருவ வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கொரோனா பொம்மையைகளை குண்டத்தில் போட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பொம்மை ஒன்றை உருவாக்கி அதனை ஹோம குண்டத்தில் போட்டு அர்ச்சகர்கள் யாகம் வளர்த்தனர். தொடர்ந்து திரெளபதியம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இந்த யாக பூஜையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த யாக பூஜையில் ஐந்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News