ஆங்கில புத்தாண்டு: வழிபாட்டுத் தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கில புத்தாண்டான 2024-ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.;

facebooktwitter-grey
Update: 2024-01-01 03:54 GMT
ஆங்கில புத்தாண்டு: வழிபாட்டுத் தலங்களில் குவிந்த மக்கள்

பிள்ளையார்பட்டி கோவில் 

  • whatsapp icon

2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் குவிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வளமாக்க வேண்டி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதிகாலையிலேயே திரளாள பக்தர்கள் குவிந்துள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் ஏராளாமான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.

திருத்தணி முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பர நாதர் கோவில், கைலாசநாதர் கோவில் மற்றும் ராமநாதபுரம் ராமநாத சாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் ராமேஸ்வரம் நாமநாதசுவாமி கோயிலிலும், இதனிடையே 2024ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தைக் காண குமரி திரிவேணி சங்கமம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இதேபோல் 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Tags:    

Similar News