அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார்

Update: 2021-08-10 09:12 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் டாக்டர் வேல்ராஜ் 

அண்ணாபல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த சுரப்பா பணியாற்றினார். அவரது பதவிக்காலம், ஏப்., 11ல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் சார்பில் தேடல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் புதிய துணைவேந்தருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 'ஆன்லைன்' வழியாக நேர்முக தேர்வு நடந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. தற்போது, அண்ணா பல்கலையில் பேராசிரியராக வேல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். 33 ஆண்டுகள் பேராசிரியர் அனுபவம் கொண்டவர் ஆவார்.

Tags:    

Similar News