புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் புதிய இயக்குனராக முனைவர் மகரந்த் காங்ரேகர் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால் 18.04.2024 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் தற்போது பொறுப்பேற்றுள்ள முனைவர் மகரந்த் காங்ரேகர் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் காரக்பூரில் கட்டிடப் பொறியியல் துறையின் பேராசிரியராக 2004-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு பொறுப்பு இயக்குநராக இருந்த முனைவர். உஷா நடேசனுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 7 நாள் கருத்தரங்கு துவக்கம்
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக ஏழு நாள் கருத்தரங்கு இன்று காலை (06.05.2024) தொடங்கியது. இக்கருத்தரங்கிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதியுதவி அளித்துள்ளது.
இக்கருத்தரங்கினை கழகத்தின் இயக்குநர் முனைவர். மகரந்த் மாதோ காங்ரேகர் அவர்கள் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனங்களின் இயக்குனர் முனைவர். உஷா நடேசன் கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் மற்றும் முனைவர். கோப்பெருந்தேவி, துறைத் தலைவர் (மின் மற்றும் மின்னணுவியல் துறை) ஆகியோர் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அபி ஜோசப், மூத்த இயக்குநர்/விஞ்ஞானி-ஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு சிடிஏசி திருவனந்தபுரம் அவர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கிற்கு புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி, முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் உட்பட மொத்தம் இருபத்தைந்து பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இக்கருத்தரங்கில் சி-டாக் திருவனந்தபுரம், என்ஐடி சில்சார், சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி, ஜெய்ஸ் அமேதி, என்ஐடி புதுச்சேரி, கண்ணூர் அரசு பொறியியல் கல்லூரி, கேரளா மற்றும் எல்பிஎஸ் பொறியியல் கல்லூரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பதினோரு துறை வல்லுநர்கள் விரிவுரையாற்ற உள்ளனர்.