பஜாஜ் பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகள் அறிமுகம்

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 250 மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன;

Update: 2021-10-28 09:58 GMT

பஜாஜ் பல்சர் 250

புதிய பஜாஜ் பல்சர் 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், 2 வால்வு, ஆயில் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 24.5 பிஎஸ் பீக் பவர் மற்றும் 21.5 என்எம் டார்க்கை உருவாக்குகிறது.

LED புரொஜெக்டர் யூனிபாட் ஹெட்லேம்ப், ரிவர்ஸ்-பூமராங் எல்இடி, டெலஸ்கோப் ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகிய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

டிஸ்க் பிரேக், ஒற்றை சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை எடை 162 கிலோ; பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 14 லிட்டர்.


டெக்னோ கிரே மற்றும் ரேசிங் ரெட் ஆகிய இரண்டு வர்ணங்களில் கிடைக்கும் இந்த பைக் ரூ.1.38 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும்

Tags:    

Similar News