நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-05-16 00:30 GMT

நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணிக்காக வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்.

நெல்லை, தருவை அருகே உள்ள தனியார் கல்குவாரியில்,   பாறை சரிந்து ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். அதில் மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய மூன்று பேர் அந்த இடிபாடுகளுக்கு உள்ளேயே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க,  சென்னை அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு நள்ளிரவு வந்தடைந்தனர்.

மீட்புக்குழுவினர், குவாரியின் உள்ளே சென்று சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தனர். இடிந்து விழுந்த ராட்சஸ பாறையை,  இரும்புராடு கொண்டு இருபுறங்களிலும் கட்டி வைத்து மீட்பதற்கான ஆலோசனை செய்தனர். மேலும் மீட்புப்படையினர் குவாரி உள்ளே இறங்குவதற்கு பொக்லைன் எந்திரம் கோரியுள்ளனர்.

பின்பு இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆய்வாளர் விவேக் கூறுகையில். விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு முழு முயற்சி மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் இன்னும் அதிகமான குழுவும் இதில் ஈடுபடுத்தப்படும். திங்களன்று  அதிகாலை 6 மணிக்கு பணியை தொடங்குகிறோம். அதிகாரிகளின் ஆலோசனைப்படி மீட்பு பணி துரிதமாக நடைபெறும் என கூறினார்.

Tags:    

Similar News