கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு அயலக தமிழ் இளைஞர்கள் மரியாதை
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அயலக தமிழ் இளைஞர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுலுத்தினர்.;
"வேர்களைத் தேடி" திட்டத்தின் மூலம் தமிழகம் வந்த அயலக தமிழ் இளைஞர்கள், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுலுத்தினர்.
"வேர்களைத் தேடி" திட்டத்தின் மூலம் தமிழகம் வந்த அயலக தமிழ் இளைஞர்கள், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுலுத்தினர்.
இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக அயல் நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் அயலகத் தமிழர்களின் குடும்பங்களில் இருந்து 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு இணைக்கும் விதமாக வேர்களைத் தேடி" என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செயல்படுத்தியுள்ளது.
இதில் முதல்கட்டமாக இவ்வாண்டு, கனடா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 57 மாணவர்கள் "வேர்களைத் தேடி" திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வரவழைப்பட்டனர். அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி, கே.எஸ்.மஸ்தான் "வேர்களைத் தேடி "பயணத்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாமல்லபுரம், ஆலம்பாறை கோட்டை அருட்பிரகாச வள்ளலாரின் சத்ய ஞான சபை, நீர்மேலாண்மையை உணர்த்து வீராணம் ஏரி, கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம், சுவாமிமலை உலோக பொருட்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவிய உருவாக்க கூடங்கள், தஞ்சை பெரியக்கோவில், சரஸ்வதி மஹால், சித்தன்னவாசல், காரைக்குடி, செட்டிநாட்டுக்கலாச்சாரம் ஆகிய இடங்களை கண்களித்துவிட்டு விருதுநகர் மாவட்டம் சென்றனர். அங்கு கிராம மக்களுடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள். தொடர்ந்து ஆதிச்சநல்லூரை பார்வையிட்டுவிட்டு கன்னியாகுமரி வந்தடைந்தனர்.
அங்கு அய்யன் திருவள்ளவரின் பிரமாண்டமான சிலையை படகில் சென்று கண்டுக்களித்தனர். திருக்குறளின் பெருமைகளை நினைவுகூர்ந்த அயலகத் தமிழ் இளைஞர்கள் திருக்குறளை உச்சரித்து திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நீர்வழிப்பாலத்தையும் கண்டுகளித்தனர்.
பயணக்குழு இன்று குமரியில் இருந்து புறப்பட்டு கூந்தன்குளம், திருநெல்வேலி வழியாக மதுரை சென்றடைகிறது.