நீட் மசோதா திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் -ஆளுநர்

நீட் மசோதா திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் -ஆளுநர்

Update: 2022-04-07 14:02 GMT

ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர் தரப்பில் விளக்கம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஆளுநர் ஆர். என். ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆளுநர் தரப்பு, பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டபேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக முதல்வர் தன்னை சந்தித்த போது, மசோதா தொடர்பான நிலை, சட்டப்பூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின் படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தன் நிலைப்பாட்டை ஸ்டாலினுக்கு தலைமை செயலர் புரிய வைத்திருப்பார் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுக., வினர் எழுப்பி வரும் குரல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்.என்.ரவி தன் பொறுப்பை தான் கவனித்தி வருவதாகவும், திமுக., வினர் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News