தேசிய பத்திரிகை தினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-16 06:00 GMT

பைல் படம்.

நாடுமுழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு தலைவர்களும், மாநில முதல்வர்களும் பத்திரிகையாளர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று.

உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன.

நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News