சென்னை பள்ளியில் நடிகர் விஷால் ஏற்றினார் தேசிய கொடி
Vishal News - சென்னை பள்ளியில் நடிகர் விஷால் தேசிய கொடி ஏற்றி மரம் நட்டினார்.;
Vishal News -தமிழகம் முழுவதும் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றினார்கள். இது தவிர அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சில இடங்களில் தேசிய கொடியை ஏற்றினார்கள்.
இந்த நிலையில் சென்னை திரு.வி.க. பள்ளியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால் தேசிய கொடி ஏற்றியுள்ளார். தேசிய கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்திய அவர் அந்த பள்ளியில் மரக்கன்றுகளையும் நட்டினார். என்.சி.சி. மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2