குமாரபாளையம் வாரச்சந்தை இயங்காது: ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக, குமாரபாளையம் வாரச்சந்தை, மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்று, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Update: 2021-04-30 04:54 GMT

இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று அலை 2 மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளிலும், கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த  சூழலை கருத்தில் கொண்டு, மக்கள் ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கும் வகையில், குமாரபாளையம் பகுதியில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் இயங்கிவரும் வெள்ளிச்சந்தை, மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பை, பிளக்ஸ் பேனரை மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், வாரச் சந்தை காய்கறி வியாபாரிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News