நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு
நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.;
நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்-போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான சான்றிதழ்களின் அனைத்து சான்றளிக்கப்பட்ட நகல்கள் இணைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண்.78/ஏ, 78/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் சாலை, நாமக்கல்-637 001. முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு: Click Here