வல்வில் ஓரி விழாவிற்கு தடை செய்த மாவட்ட நிர்வாகம்-வெறிச்சோடிய கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக ஆடி 18 அன்று கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா வெகு விமரிசையாக அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Update: 2021-08-03 07:03 GMT

வெறிச்சோடிய கொல்லிமலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பல ஆண்டு காலமாக ஆடி 18 அன்று கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா வெகு விமரிசையாக அரசு விழாவாக ஏற்கப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயம் செம்மேட்டில் அனைத்து துறை சார்பில் மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள், வில்வித்தை போட்டிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இவற்றை காண உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுளா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.


ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தளமான கொல்லிமலை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே மாவட்ட நிர்வாகம் சார்வில் சுற்றுலாத்துறையினர் மற்றும் ஊரகவளர்ச்சி துறையினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எனினும் அடுத்த ஆண்டாவது கொரோனா தொற்று குறைந்து விழா நடத்தப்படுமா என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.



 


Tags:    

Similar News