தமிழக பாரதிய ஜனதா சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரன்
பாஜக குழு தலைவராக போட்டியின்றி தேர்வு;
பாஜக சட்டமன்ற குழு தலைவராக மாநில துணைத்தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் கோவை தெற்கு வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதி நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதி எம்ஆர் காந்தி மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி. சரஸ்வதி ஆகிய நான்கு வேட்பாளர்கள் கடும் போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக கூட்டணியின் மூலமாக மேற்கண்ட நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளதால் தமிழகத்தில் 2001 தேர்தலுக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து பாஜக சட்டமன்றத்திற்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டு திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.