சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வதையடுத்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்டணத்தின் விவரங்கள் படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 55-லிருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 85-லிருந்து 100 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் ரூ.1,960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைபோல் மினி லாரி, இலகுரக வாகன போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் 115 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் 170 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் ரூ.3,435 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் லாரிகளுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 200-லிருந்து 230 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 300-லிருந்து 345 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் மாத கட்டணம் ரூ.6,870 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதைபோல் பல அச்சுகள் கொண்ட கனரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 320 -லிருந்து 370 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 480-லிருந்து 550 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இவ்வகை வாகனங்களுக்கு மாத கட்டணம் ரூ.11,035 ஆகவும் தற்போது வசூலிக்கப்பட உள்ளது.
சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.