அமைச்சர் செந்தில் பாலாஜி துறைகள் மாற்றம்:ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை
அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை அமைச்சர் தென்னரசுவிற்கும் , மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது;
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரை கைது செய்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
அதே சமயம் துறைகள் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார்