உ.வே.சா 168-ஆவது பிறந்தநாள்: அமைச்சர் மலர்தூவி மரியாதை
தமிழ்தாத்தா உ.வே.சா 168-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் மா. சுப்ரமணியன் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்;
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் 168-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சுப்ரமணியன், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.