அமைச்சர் சி.வி.கணேசன் துணைவியார் மறைவு : முதலமைச்சர் இரங்கல்
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துணைவியார் மறைவு: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்;
அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அவரது துணைவியார் பவானி அம்மாள்
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துணைவியார் மறைவெய்தினார். அதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாள் அவர்கள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் அவர்களின் பொது வாழ்வில் உற்ற துணையாகவும் உறுதிமிக்க ஆதரவாளராகவும் விளங்கிய பவானி அம்மாள் அவர்களின் மறைவு பேரிழப்பாகும். தனது ஒவ்வொரு துளி முன்னேற்றத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வாழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் அமைச்சர் கணேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.