கைதி உடையில் கருணாநிதி; எச்சரித்த எம்.ஜி.ஆர்
சிறை சென்ற கருணாநிதிக்கு கைதி உடை அளிக்கப்பட்டதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். எப்படி கைதி உடை அவருக்கு அளிக்கலாம் என எச்சரித்துள்ளார்.;
முன்னாள் சிறைத்துறை டிஐஜி ராமச்சந்திரன் தனியார் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து கடந்த கால நினைவலை ஒன்றை பகிர்ந்துக் கொண்டார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், "கருணாநிதிக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறை சட்டவிதிப்படி அவருக்கு ஒரு வேலையும், கைதி உடையும் கொடுக்க வேண்டும். அதன்படி மாலை 4 மணிக்கு வெள்ளை கைதி உடையை அவருக்கு கொடுத்தோம். மறுநாள் காலை அதே உடையில் அவர் நேர்காணலுக்கு சென்றுவிட்டார்.
இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும் அரசியல்வாதிகளை ஏ வகுப்பு சிறை கைதிகளாக மாற்றியதும் கருணாநிதிதான். அப்போது நீங்கள் கைதி உடை அணியத் தேவையில்லை. நீங்கள் ஏ வகுப்பு சிறைக் கைதி என்றேன். ஆகவே நீங்க உங்களது உடையை உடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த விவகாரம் அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் புகைப்படத்துடன், "கைதி உடையில் கருணாநிதி" என வந்தது.
அந்தப் புகைப்படத்தில் தட்டு, ஒரு டம்ளரும் காணப்பட்டது. இந்தப் புகைப்படம் எப்படி எடுத்தார்கள்? என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஏனென்றால் அப்போது புகைப்படம் எடுக்க அரசின் அனுமதி தேவை.
இந்தக் குழப்பத்துக்கு கருனாநிதிஏ விடை கொடுத்தார். கருணாநிதி ஏற்கனவே முரசொலி அலுவலகத்தில் கைதி உடையில் இருப்பது போன்று ஒரு போட்டோஷூட் நடத்தி, கைதி உடையில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.
இந்த உண்மை தெரியவருவதற்குள் டிஜிபி அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. கருணாநிதிக்கு சிறை உடை கொடுத்தீர்களா? என கேட்டனர். ஆம் கொடுத்தேன் என்றேன். அவர் எப்படி கொடுக்கலாம் எனக் கேள்வியெழுப்பினர். நான் கடுங்காவல் தண்டனை என்பதால் சிறை உடை கொடுத்தேன் என்றேன். அப்போது கைதி உடை கொடுக்க வேண்டாம். அதனை உடனே வாங்கி விடுங்கள் என்றார். மேலும் கைதி உடை வேண்டாம் என்று நான் சொன்னாலும் கருணாநிதி கேட்டிருக்க மாட்டோர். அவரே வாங்கி மாட்டியிருப்பார். அப்படிஆளுதான் அவர் என்றார்.
உடனே கருணாநிதியிடம் சென்று கைதி உடையை திருப்பி கேட்டதற்கு அவர் தர மறுத்து, சிரித்துக் கொண்டே, நான் இப்போது திருப்பி கொடுத்து விட்டால் பத்திரிக்கைகள் சொன்னது பொய்யினு ஆகிறாது? என கூறினார்
தொடர்ந்து டிஜிபி என்னிடம் அவரை சாதாரண உடை அனுமதிக்கும்படியம் கேட்டுக்கொண்டார். முன்னதாக அவருக்கு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன் செய்து கைதி உடை அளிக்க வேண்டாம் என வலியுறுத்தியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்,
முன்னாள் டிஐஜி ராமச்சந்திரனின் இந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.