கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்க தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கிராம கோவில் பூசாரிகள் மதுரை மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;

Update: 2021-12-16 03:30 GMT

மதுரையில் நடைபெற்ற கிராம கோயில் பூஜாரிகள் மாநாடு

மதுரை கிராம கோவில் பூசாரிகள் மாத ஊக்கத்தொகை குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற  கிராம கோவில் பூசாரிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷ்த் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருளும் பேரவை சார்பில் மதுரை மாவட்டம் முதல் மாநாடு கருமாத்தூரில்  நடந்தது. தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்

.தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தின் நிறுவனரும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலரும்  வேதாந்தம்  பேசியதாவது: மதமாற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்துக்களின் சதவிகிதம் 79 சதவீதமாக குறைந்துவிட்டது. 21 சதவீதத்தினர் மாற்று மதம் சென்றுவிட்டனர்.மதமாற்றத்தை தடுக்க வேண்டும் தமிழ் கலாசாரம் பண்பாடு வளர கிராமக் கோவில்கள் தான் காரணம் .நாட்டின் எல்லையே ராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்.

கிராம எல்லைகளை கிராமக் கோயில் பூசாரிகள் காத்துவருகின்றனர்.பூசாரிகள் மந்திரங்கள் கற்று அதை பூஜையின்போது கூறினால்தான் மக்கள் மத்தியில் மரியாதை ஏற்படும்.அதற்கு பூசாரிகள் தயாராகவேண்டும் பூசாரிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டப்படிப்பு படிக்க வேண்டும் .மேற்கு வங்கத்தில் கிராமக் கோவில் பூசாரிகளுக்கு சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது.ஆனால் தமிழகத்தில் 2,000 ரூபாயாக உள்ளது என்றார் அவர். கூட்டத்தில் ஏராளமான தொழில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News